திரிஷா குறித்த சர்ச்சை: மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை! - Seithipunal
Seithipunal


நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை திரிஷா குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் சென்னை காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு திரைத்துறை மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும் எதிர்ப்பும் எழுந்தன. 

மேலும் தேசிய மகளிர் ஆணையம் நேற்று முன்தினம் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு பரிந்துரை செய்தது. 

இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது கவலை அளிப்பதாக உள்ளது. 

இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஏற்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகள் நேற்று வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி 41 ஏ என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police sent notice to Mansoor Ali Khan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->