தமிழ்நாட்டில் வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு; முகக்கவசம் கட்டாயம்; எச்சரிக்கும் மருத்துவர்கள்..! - Seithipunal
Seithipunal


பனி மற்றும் குளிர் காலத்தில் 05 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரை 'வாக்கிங் நிமோனியா' எனப்படும் நுரையீரல் தொற்று காய்ச்சல் தாக்குவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். 

பருவமழை காலத்தில் பரவி வரும் வாக்கிங் நிமோனியா காய்ச்சல் மக்கள் மத்தியில் ஒருவிதமான பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மைக்கோ பிளாஸ்மா நிமோனியாவால் ஏற்படும் நுரையீரல் தொற்று உள்ளவர்கள் வீட்டிலோ அல்லது படுக்கையிலோ இருக்க மாட்டார்கள். நடமாடி கொண்டிருப்பார்கள். எனவே தான் வாக்கிங் நிமோனியா என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக தோன்றினாலும், பொதுவான அறிகுறிகளாக உடல் சோர்வு, காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி இருக்கும். குழந்தைகளை பொறுத்தவரை தும்மல், சுவாசிப்பதில் சிரமம், சளி, கண்களில் நீர்வடிதல் போன்றவை காணப்படும்.

வழக்கமான நிமோனியாவை விட வெவ்வேறு பாக்டீரியாக்களால் ஏற்படும் நுரையீரல் தொற்று. பெரும்பாலும் குழந்தைகள் அல்லது இளம் வயதினரிடையே நெருங்கிய இடங்களில் வசிப்பவர்களுக்கு வாக்கிங் நிமோனியா காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

நுரையீரல் தொற்று உள்ளவர்களுக்கு பொதுவாக குளிர், அதிகமான இருமல், சோர்வு காணப்படும். சிலர் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். இந்த மாதிரி அறிகுறி இந்த தொற்று ஏற்பட்டு இருப்பவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும் கிருமிகளால் மற்றவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படும் எனவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் கைகுலுக்குவதை தவிர்க்கலாம். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும்போது மூக்கு மற்றும் வாயை தொடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், கைகளின் மூலம் மூக்கு மற்றும் வாய் வழியாக கிருமி சென்று காய்ச்சலை பரப்பும்.

அதேபோல, மற்றவர்களின் எச்சில் பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தனியாக இருத்தல் அவசியம். இது நுரையீரல் தொற்றை ஏற்படுத்தும் காய்ச்சல் என்பதால், உடனடியாக டாக்டரிடம் காண்பித்து மிதமான ஆன்டிபயாடிக் மாத்திரைகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்த நோய் வயதில் மூத்தவர்களை பெரிதும் பாதிக்கும் எனவும், அவ்வாறு தாக்கினால் தாங்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டிள்ளது

இளம் வயதினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதோடு இணை நோய்கள் எதுவும் இருக்காது என்பதால், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு வந்து விடுவர் என்றும் இந்திய மருத்துவ கழக தென் மண்டல துணைத் தலைவர் டாக்டர் அழகவெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நெருக்கமான இடங்களில் செல்பவர்கள், பள்ளி அல்லது கல்லூரி மாணவ-மாணவிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் எளிதில் இந்த தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி மட்டுமே தீர்வு என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Walking pneumonia cases increase in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->