நாட்டின் உயரிய விருது பெறும் தமிழக வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


இந்திய விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார் உள்ளிட்ட நான்கு பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோன்று, அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் மூன்று தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது:- "நமது உலக செஸ் சாம்பியன் குகேஷ், நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது 2024க்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நமது பாரா தடகள வீரர்கள் மற்றும் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருதுகள் கிடைத்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

நம் அனைத்து விளையாட்டு வீரர்களும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று நம்புகிறோம்" என்றுத் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy chief minister uthayanithi stalin wish to won central govt award players


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->