ஹமாஸ் பாதுகாப்பு பிரிவு தலைவர் கொல்லப்பட்டுள்ளார்; இஸ்ரேல் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஹஸ்ஸம் ஷாவான் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு நடந்த ஆளில்லா விமான தாக்குதல அவர் கொல்லப்பட்டுள்ளார்  என இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவித்து உள்ளது.

இது குறித்து,  இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், கான் யூனிஸ் பகுதியில் மனிதாபிமான மண்டலத்தில் இருந்தபோது, ஷாவான் மீது தாக்குதல் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது.

தெற்கு காசா முனை பகுதியில் இருந்து இன்று மாலை இஸ்ரேல் சமூகத்தினரை நோக்கி ராக்கெட் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த ராக்கெட் இடைமறித்து தாக்குதல் முறியடிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 07-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது.  இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hamas security chief has been killed Israel announces


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->