நாளை பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீஸ்.. ரசிகர்களுக்கு சோகமான செய்தி வெளியிட்ட படக்குழு.! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியது.

பெரும், எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வசூல் ரீதியாக பயங்கரமாக வெற்றி பெற்றது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை (ஏப்ரல் 28) திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. இதனிடையே பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்களுடைய அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரிய ஹீரோ படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் தற்போது வரை பொன்னியன் செல்வன் 2 படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

எனவே எப்போதும் போல பொன்னியன் செல்வன் 2 திரைப்படம் காலை 9 மணி முதல் திரையிடப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அனுமதியின்றி காட்சி ஒளிபரப்பப்படுகிறதா எனவும் கண்காணிக்க வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியளிகளுக்கு மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin Selvan 2 movie not allowed special shows


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->