பொன்னியின் செல்வன் படத்தின் 'ஆன்ந்தம்' தனிப்பாடல் எப்போது ரிலீஸ்.? படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியது.

பெரும், எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வசூல் ரீதியாக பயங்கரமாக வெற்றி பெற்றது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது.

அதன்படி, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, நடிகை குஷ்பு ரேவதி உள்ளிட்டஉள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதனிடையே பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன் 2 படத்தின் 'ஆன்ந்தம்' தனிப் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த பாடலின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin Selvan Anthem song release tomorrow 6 PM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->