விக்ரம், ஜெயம் ரவி மணிரத்னத்திற்கு நோட்டீஸ்.. பொன்னியின் செல்வனால் சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


கல்கி எழுதிய வரலாற்று கதையை மையமாகக் கொண்ட பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே மணிரத்தினம் அதனை படமாக்கியுள்ளார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யாராய் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கும் நிலையில் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்த புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், தற்போது சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் இந்த பொன்னியின் செல்வன் படம் குறித்து மணிரத்தினம் ஜெயம் ரவி மற்றும் விக்ரம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், " ஆதித்யா கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் நெற்றியில் நாமம் போடப்பட்டுள்ளது, தவறானது. படத்தை திரையிடுவதற்கு முன்பு எங்களுக்கு போட்டு காண்பிக்க வேண்டும். படத்தில் நிறைய வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin Selvan issue makes wrong Notties


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->