ஓடிடியில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 - எப்போது தெரியுமா?  - Seithipunal
Seithipunal


ஓடிடியில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 - எப்போது தெரியுமா? 

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் இரண்டு பாகமாக வெளியானது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இரண்டாவது பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகியாது. இந்தப் படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த படம் வருகிற 26-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தை முதல் கட்டணம் கட்டி பார்க்க வேண்டிய வகையில் தான் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரைம் ஓடிடி தளத்தின் பயனாளிகள் ஜூன் 2-ம் தேதி முதல் தான் இந்த படத்தை கூடுதல் கட்டணம் இல்லாமல் பார்க்கலாம். 

ஆனால், அதே சமயம் ஓடிடியில் வெளியாவது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் அமேசான் தரப்பு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ponniyin selvan t ott release update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->