அடேங்கப்பா.. ஒரு செருப்பின் விலை இத்தனை லட்சமா.? பீஸ்ட் பட நாயகியால் அதிர்ந்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸில் நடைபெற்று வருகின்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே முதல் முறையாக கலந்து கொண்டார். ஜீவாவின் முகமூடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

இந்த படம் தோல்வியை தழுவிய காரணத்தால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தெலுங்கு படங்களில் பூஜா ஹெக்டே நடிக்க ஆரம்பித்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக மாறினார். அதன் பின்னர் அவருக்கு விஜயின் பீஸ்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

தெலுங்கில் ராதேஷ்யாம் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தார். தற்போது, இந்தியில் சல்மான் கானுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இத்தகைய நிலையில் பிரான்சில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில், அதில் முதன் முறையாக பூஜா ஹெக்டே கலந்து கொண்டார்.

அதில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில், அவர் கவர்ச்சி உடை அணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அணிந்திருந்த செருப்பின் விலை பலரையும் வியக்க வைத்துள்ளது. அப்போது நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருந்த செருப்பின் விலை ரூ.43 லட்சம் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pooja Hegde slipper photos viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->