நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்கவுள்ள இளம் இயக்குனர்? அவரே வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


ஜெயம் ரவி நடிப்பில் சம்யுக்தா ஹெக்டே ஹீரோயினாக நடித்த திரைப்படம் தான் கோமாளி. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள். 

நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருப்பார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் லவ் டுடே படம் அடுத்த மாதத்தில் வெளியாக உள்ளது.

இத்தகைய சூழலில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பிரதீப் ரங்கநாதன் தான் தளபதி விஜய்க்கு கதை கூறி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். நகைச்சுவை படங்களில் விஜய் எப்பொழுதும் விரும்பி நடிப்பார். எனவே தான் கோமாளி படத்தை பார்த்துவிட்டு தனக்கும் அப்படி ஒரு கதை வேண்டுமென பிரதீப் ரங்கநாதனிடம் கேட்டிருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் இயக்குகின்ற தளபதி 67 திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்குள் முடிந்து வெளியாகி விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pradeep Renganadhan may Direct Vijay Next Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->