"என் மொழியை அவமதித்து உன் மொழியை நீ திணித்தால்." நெட்டிசனுடன் மல்லுக்கட்டும் வில்லன் நடிகர்.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக  இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் புரட்சி நடிகராகவும், வில்லன் நடிகராகவும் இந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் ஒரு அரசியல் செயல்பாட்டாளராகவும், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருபவர். வலதுசாரிகளுக்கு எதிராக தனது கருத்துக்களை எப்பொழுதும்  ஆணித்தரமாக வெளியிடும் ஒரு நடிகர் தான் பிரகாஷ்ராஜ்.

சமீபத்தில் இவர் தனது வலைதள பக்கத்தில் ஹிந்தி தெரியாது போடா என்று கன்னட மொழியில் எழுதப்பட்ட டி-ஷர்ட் ஒன்றினை அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இது பலத்த சர்ச்சையை கிளப்பியது. இந்தப் புகைப்படத்தை பகிர்ந்த ஒரு இணையதளவாசி தமிழ்நாடு போலீசை டேக் செய்து, இவரை ஏன் கைது செய்யவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ் "தனக்கு ஏழு மொழிகள் தெரியும், எனது மொழியை யார் மீதும் நான் திணிக்கவில்லை, ஆனால் என் மொழியை அவமதித்து உன் மொழியை நீ திணித்தால் அதற்கு எதிராக களம் இறங்கி போராடுவேன்" எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக அவ்வப்போது தனது கண்டன குரல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி வரும் ஒரு நடிகர் தான் பிரகாஷ்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prakash raj lashing a twitter user for enforcing hindi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->