கிச்சா சுதீப்பின் பாஜக ஆதரவு முடிவால் அதிர்ச்சி அடைந்தேன் -நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


கன்னட சினிமாவின் பிரபலமான நடிகரான கிச்சா சுதீப் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களை கொண்டவர். நான் ஈ மற்றும் பாகுபலி ஆகிய திரைப்படங்கள் இவரது நடிப்பில் பிரபலமான திரைப்படங்கள் ஆகும்.

வருகின்ற மே மாதம் கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. பாஜக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜடாத தளம் வாங்கிய கட்சிகள் கர்நாடக அரியணையை கைப்பற்ற கடுமையான போட்டியில் இருக்கின்றன.

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பிரபல கன்னட நடிகரான சுதீப் கிச்சா பாஜகவில் சேர இருந்தார். இந்நிலையில் மர்ம நபரிடம் அவரது அந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டல் கடிதம் வந்ததை தொடர்ந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அது தொடர்பாக பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார் சுதீப் கிச்சா.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், "மிரட்டல் கடிதத்தை பெற்றுக் கொண்டேன் இதை யார் எனக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று தெரியும். சினிமா துறையைச் சார்ந்தவர்கள் தான் எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். வெகு விரைவில் அவர்களுக்கான பதிலடி கொடுப்பேன். கடினமான நேரங்களில் என்னுடன் இருந்தவர்களை என்றுமே மறக்க மாட்டேன். நான் பிஜேபிக்காக தேர்தல் பிரச்சாரம் தான் செய்யப் போகிறேன் எலெக்ஷனில் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'கர்நாடகாவில் தோல்வி முகம் காண கூடிய மற்றும் நம்பிக்கையற்ற பாஜக-வால் பரப்பப்படும் போலியான செய்தியாக இது இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்' என பதிவிட்டிருந்தார். தற்போது இது உறுதியான நிலையில், பாஜக-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சுதீப் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prakash Raj tweet about kicha sudeep support BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->