அப்பாவாக போகும் அட்லி.. மனைவி பிரியா வெளியிட்ட குட் நியூஸ்.!
Priya Atlee Pregnant
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின்னர் மெர்சல், பிகில், தெறி ஆகிய திரைப்படங்களை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்றவர்.
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற அங்கீகாரத்தை அட்லீ பெற்றுள்ளார். இவர் தொலைக்காட்சி நடிகை கிருஷ்ண பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
பிரியா எப்பொழுதும் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதையாவது பகிர்ந்து வருவது வழக்கம். தனது கணவர் மீது அவர் காட்டும் காதல் அனைவருக்கும் பொறாமை படும் விதமாக இருக்கும்.
இந்நிலையில் பிரியா அட்லி தனது instagram பக்கத்தில் கர்ப்பமாக இருப்பதாக கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றார். இது குறித்த பதிவில், "நான் கர்ப்பமாக இருக்கிறேன் உங்கள் அனைவரது ஆசீர்வாதம் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.