கேவலமான, அவலமான, தரம் கெட்ட நிலை திமுக-வை தவிர எந்த கட்சிக்காவது வந்துருக்கா? உதயநிதிக்கு பதிலடி கொடுத்த பாஜக! - Seithipunal
Seithipunal


திருச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்.. அதிமுக கூட்டணிக்கு வாங்க என்றால் ஒருத்தன் நூறு கோடி கேட்கிறான், ஒருத்தன் 20 சீட்டு கேட்கிறான் என்கிறார்.

இந்த மாதிரி கேவலமான, அவலமான நிலை எந்த கட்சிக்காவது வந்துருக்கா?, ஆனால், நம்முடைய கூட்டணி, வெற்றி கூட்டணி, திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தொடர்ந்து ஏழு தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது. 

வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கூட்டணிக்கு வந்த கட்சிகளுக்கு 2 சீட்டுக்கு 15 கோடி, 2 சீட்டுக்கு 10 கோடி கொடுத்த கேவலமான, அவலமான, தரம் கெட்ட நிலை திமுக வை தவிர எந்த கட்சிக்காவது வந்துருக்கா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan reply to DMK Udhay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->