பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் உதவிக்கரம் நீட்டிய திரைப்படத் தயாரிப்பாளர்.!  - Seithipunal
Seithipunal


பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு திரையுலகில் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தாணு தயாரிப்பில் வெளியான 'நானே வருவேன்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சூர்யா - வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வாடிவாசல்' படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார். இதற்கிடையே தயாரிப்பாளர் தாணு சினிமாவைத் தாண்டி பலருக்கு உதவியும் செய்து வருகிறார். 

அதன படி, தயாரிப்பாளர் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயதுடைய பெண்ணுக்கு நிதியுதவி அளித்துள்ளார். 

இந்நிலையில், அந்தப் பெண் கடந்த 2 வருடங்களாக நுரையீரல் பாதிப்பால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தாணு அந்தப் பெண்ணின் சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். 

இதற்கான காசோலையை தயாரிப்பாளர் தாணு சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஆகியோரிடம் வழங்கியுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

producer kalaipuli thanu 5 lacks help in woman medical treatment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->