ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது.. பிரபல தயாரிப்பாளர் சர்ச்சை பதிவு.! - Seithipunal
Seithipunal


பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்‌.பிரபு ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது என வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையாகியுள்ளது.

இந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 இதனையடுத்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நேற்று பேசிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தயாநிதி மாறன், ரஜினிகாந்துக்கு தற்போது 72 வயதான போதிலும் தயாரிப்பாளர்கள் அவரது கால் ஷீட்டுக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். அப்படி உங்களுக்கும் காத்திருந்தால் நீங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேசியிருந்தார்.


இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரபல தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், திரைத்துறையில் ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்து விட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றார் போல மார்க்கெட்டை வைத்துள்ளனர். இதன் மதிப்பு வெளியீட்டு தேதி, உள்ளடக்கம், போட்டி போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும்.

இதைப் புரிந்து கொண்டு தொழிலில் ஒருவரை ஒருவர் ஆதரிக்க தொடங்கும் போது ஒட்டுமொத்த சந்தையை உயர்ந்து எல்லைகளைத் தாண்டி விரிவடைகிறது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு திரைத்துறை. அந்தந்த மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள் வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இதனை நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத்துறையும் சிறந்த தரத்திற்கு உயரம் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Producer SR Prabhu controversy tweet about superstar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->