இன்று மாலை 6 மணிக்கு 'தி கோட்' படத்தின் ப்ரோமோ! படக்குழு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் நாளை செப்-5 உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்த்து இன்று மாலை ப்ரோமோ வெளியாக உள்ளது.

நடிகர் விஜய் ,வெங்கட் பிரபு இயக்கத்தில்  'தி கோட்' திரைபடத்தில் நடித்துள்ளார்.இருவரும் இணையும் முதல் படமாகும், இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். 

இந்த 'தி கோட்' படத்தின் நீளம் 3 மணி நேரம். பல தியேட்டர்களில் காலை 10 மணிக்கு ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளார்கள்.  சில தியேட்டர்களில் மட்டும் இரவு 12 மணிக்கு மேல் முதல் காட்சிக்கான முன்பதிவு நடந்திருக்கிறது. 

இந்த வகையில் 'தி கோட்' படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நன்றாக நடந்து கொண்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் விஜயின் மாஸ் படமாக இருக்கும் எனவும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் நாளை 'தி கோட்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோ ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனால், ப்ரோமோவை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Promo of The Goat at 6 pm today Film crew announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->