குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.! என்னன்னு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அப்படி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது நல்ல நிலையில் இருக்கின்றனர். வெள்ளித் திரையில் நடிக்க அவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் புகழ் மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இதில், சிவாங்கியும் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகின்றார். அத்துடன் பவித்ரா லட்சுமி சதீஷ்க்கு ஜோடியாக நாய் சேகர் திரைப்படத்தில் நடிக்கிறார். மதுரை முத்து மற்றும் தீபா ஆகியோரும் நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தர்ஷா குப்தாவும் தற்போது ஹீரோயினாக மோகன் ஜி யின் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்று ரசிகர்களை ஏங்க வைத்துள்ள நிலையில் தற்போது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. ஆனால், இந்த புரோமோ வீடியோவில் புகழ் இடம்பெறவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில் செஃப் தாமுவிடம் ரசிகர்கள் குக் வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் பங்கேற்பாரா என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த தாமு புகழ் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் குக் வித் கோமாளி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pugazh participate in CWC season 3


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->