புகழால்.. சூரிக்கு இத்தனை லட்சம் நஷ்டமா.?! நிகழ்ச்சியில் நடந்த களேபரம்.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் டிவி புகழ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஷூட்டிங் இறுதி நாளில் நடந்த சம்பவம் குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்டனர். 

சூட்டிங் நடக்கும் பிரமாண்ட வீட்டில் ஒரு நீச்சல் குளம் இருந்துள்ளது. புகழ் நடிகர் சூரியை அழைத்து இங்கு ஒரு வீடியோ எடுக்கலாம் என்று கூறியுள்ளார். அதற்கு முதலில் சூரிய மறுத்துவிட்டு பின்னர் சரி என்று கூறியுள்ளார். 

இருவரும் நீச்சல் குளத்திற்கு அருகில் சென்று போனை வைத்து வீடியோ எடுத்த பொழுது முதலில் சூரியின் போன் தண்ணீரில் விழுந்து விட்டது. தொடர்ந்து, புகழின் மொபைல் போனும் அதில் விழுந்தது. இருவரது செல்போன்களும் தற்போது வேலை செய்யவில்லை. 

நடிகர் சூரி போன் தண்ணீரில்விழுவதற்கு 6 நாட்களுக்கு முன்பு தான், அந்த போனை ஒன்றரை லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அவரது புதிய போனுக்கு ஆப்பு வைத்த புகழை அவர் செல்லமாக நிகழ்ச்சியின்போது கண்டித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pukazh and soori lost those mobile phones


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->