புஷ்பா 2 வின் "The Couple Song" : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது                . 

இதைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதாவது, 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாடலான 'சூசெகி (The Couple Song)'பாடல் நாளை காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான ப்ரொமோ வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்பொழுது படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

அந்தப் போஸ்டரில் அல்லு அர்ஜுனும் ராஷ்மிகா மந்தன்னாவும் சந்தோஷமாக ஆடுவது போல் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. முதல் பாடல் வெற்றியை தொடர்ந்து இந்த பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pushpa 2 movie the couple song released tomarrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->