வேர் இஸ் புஷ்பா..? பட்டைய கிளப்பும் புஷ்பா-2 ட்ரைலர்..!! - Seithipunal
Seithipunal


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் புஷ்பா 2 படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆன புஷ்பா படத்தை இயக்கிய சுகுமார் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தார். இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். சமந்தா இப்படத்தில் இடம்பெற்ற ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி அசர வைத்தார். உலக அளவில் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா திரைப்படம் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஸ்ரீவள்ளி, ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வைரல் ஹிட் அடித்தது.

பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை காட்டிலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ‘புஷ்பா தி ரூல்’ என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

"Where is pushpa? என தலைப்பில் புஷ்பா 2 திரைப்படத்தின் ட்ரைலர் 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ட்ரெய்லரில் எட்டு துப்பாக்கி குண்டுகளால் போலீசார் சுடப்பட்ட புஷ்பா காயங்களுடன் தப்பித்து விடுகிறார்.  பிறகு ஏற்படும் கலவரங்களால் ஒரு மாதம் காலம் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் நிலையில் புலி நடமாட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் புஷ்பா மீண்டும் திரையில் தோன்றுவது ட்ரெய்லருக்கு மெருகேற்றி உள்ளது. இந்த படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் புஷ்பா-2 படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pushpa 2 movie trailer released


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->