சன்னிலியோன் பயங்கரவாத கேங்ஸ்டராக நடித்துள்ள கொட்டேஷன் கேங்க் திரைப்படத்தின் ட்ரைலர் இதோ! - Seithipunal
Seithipunal


இயக்குனர் விவேக் கண்ணன் இயக்கத்தில் சன்னிலியோன், பிரியாமணி நடிப்பில் உருவாக்கியுள்ள கொட்டேஷன் கேங்க் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

இயக்குனர் விவேக் கண்ணன் இயக்கத்தில் பிரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன், ஜாக்கிசராப், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர்  கொட்டேஷன் கேங்க் திரைப்படத்தின் நடித்துள்ளனர்.

கொலை சம்பவத்தை நடத்துவதற்கு ஏலம் பெற்று கொலையாளிகளை தேர்வு செய்வதே கொட்டேஷன் கேங்க்  திரைப்படத்தின் ஒன் லைன் கதை.

பிரியாமணி சகுந்தலா என்ற கதாபாத்திலும், கவர்ச்சி நடிகையான சன்னிலியோன் பயங்கரவாத கேங்ஸ்டர் பத்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் டைலரின் மிகவும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நிரம்பி உள்ளது. காஷ்மீர், மும்பை மற்றும் சென்னை என பல இடங்களில் ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார்.

இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்க கேஜே வெங்கட்ராமன் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படம் கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், கொட்டேஷன் கேங்க் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என  படக் குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Quotation Gang Movie Trailer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->