வெளியானது தனுஷ் படத்தின் 3-வது பாடல்.!
raayan movie third song released
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். பாடலாசிரியர், இயக்குநர் என்று பல அவதாரம் எடுத்து வரும் இவர் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு 'ராயன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதையடுத்து கடந்த மே 9 -ம் தேதி ராயன் படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள ராயன் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. வருகிற 26-ந் தேதி ராயன் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
raayan movie third song released