ரஜினி மகள் வீட்டில் திருட்டு சம்பவம்.. குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்.!
Rajinikanth daughter Ishwarya home robbery case bail to Accused
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பிறகு தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் தனியாக வசித்து வருகிறார்.
அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடுபோனது குறித்து வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஈஸ்வரியின் சமீபத்திய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் அவர் திருடியது உறுதி செய்யப்பட்டாதாக போலீசார் தரப்பில் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து ஈஸ்வரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் உடன் சேர்ந்து லாக்கரிலிருந்து சிறிது சிறிதாக தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி வந்துள்ளனர். மேலும் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரிடம் இருந்து சுமார் 100 சவரன் தங்கம் மற்றும் 30 வைர நகைகள் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் குற்றவாளி தரப்பில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Rajinikanth daughter Ishwarya home robbery case bail to Accused