ஐரோப்பிய ஒன்றியத்துடன் 100% வர்த்தக ஒப்பந்தம் இருக்கும்.... நியாயமான முறையில்...!!!- அதிபர் டிரம்ப்
There 100percentage trade deal European Union fairly President Trump
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 % சாத்தியமாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதில்,ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 % வரி விதித்து, பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் 90 நாட்களுக்கு அதை தாற்காலிகமாக நிறுத்தினார்.
இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில், இத்தாலிய பிரதமர் 'ஜியோர்ஜியா மெலோனி' உடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் பகிரப்பட்டு வந்துள்ளன.
டொனால்ட் டிரம்ப்:
பின்னர் மெலோனியை சந்தித்தது குறித்து டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாவது, "எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர்.
நாங்கள் ஒன்றாகவும் நாடுகளாகவும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் 100% ஒரு வர்த்தக ஒப்பந்தம் இருக்கும்.ஆனால் அது ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
English Summary
There 100percentage trade deal European Union fairly President Trump