உயிருடன் பலியான 23 பேர்...!கூடாரங்களுக்கு குறிவைத்த இஸ்ரேல்...!!!
23 people killed alive Israel targeted tents
கடந்த 24 மணிநேரத்தில் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரயேலிய பிணை கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்த சூழலிலும் இவ்வாறு இஸ்ரேல் நடந்துக்கொண்டது.

தெற்கு நகரமான கான் யூனுஸ் பகுதியில் மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
இதில் இறந்தவர்களின் கூடாரத்துக்குள் உயிருடன் எரிந்து பலியானதாக உடல்களைப் பெற்ற மருத்துவமனை அறிவித்துள்ளது.மேலும், காசாவில் இதுவரை இஸ்ரேலிய தாக்குதலால் 51,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, கடந்த 50 நாட்களாக காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளை கூட இஸ்ரேல் முற்றாக நிறுத்தி வைத்துள்ளது.இதற்கு ஒரு முடிவு வராதா என மக்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்த போர் முடிவு பெற பல நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
English Summary
23 people killed alive Israel targeted tents