பரபரப்பு.. நடுவானில் பயணிகளை கத்தியால் குத்திய வாலிபர் சுட்டுக் கொலை.!
man died for after attack pessanger in flight
மத்திய அமெரிக்காவின் கரீபியன் கடலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெலிஸ் நாட்டில் கொரோசல் என்ற நகரத்தில் இருந்து சுற்றுலா தளமான சான் பெட்ரோசுக்கு ஒரு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 14 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் பயணம் செய்தனர்.
இதையடுத்து இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பயணம் செய்த அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து விமானத்தை கடத்த போவதாக தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், அந்த வாலிபர் விமானி மற்றும் 2 பயணிகளை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்தத் கத்திக்குத்தில் காயமடைந்த பயணி ஒருவர் வலியை பொறுத்துக்கொண்டு தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த வாலிபரை நோக்கி சுட்டதில் அந்த வாலிபர் விமானத்தில் உயிரிழந்தார்.

நீண்ட நேரமாக வேனில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம் கடலோர நகரமான லேடிவில்லில் காவல் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக தரை இறங்கியது. பின்னர் கத்திக்குத்தில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விமானத்தை கடத்தியவர் அகின் யேலா சாலா டெய்லர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
man died for after attack pessanger in flight