ரஜினியின் வேட்டையன் படத்திற்கு தடை..? உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பு வழக்கு!
Rajinikanth vettaiyan movie should be ban case HC division
நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குறிப்பாக இந்த படத்தில் மஞ்சு மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி என ஒரு நடிகைகள் பலர் நடித்து உள்ளனர்.
வேட்டையன் படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், படத்திற்கு தடை கோரி வழக்கு
வரும் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஜினியின் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வேட்டையன் படத்திற்கு தடை கோரிய மனு இன்றே விசாரணைக்கு வருகிறது.
English Summary
Rajinikanth vettaiyan movie should be ban case HC division