ராமராஜன் இப்படி ஒரு கேரக்டரா.? வெளியான தகவலால் ஆச்சர்யம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் ராமராஜன் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த தகவலில், நீதிமன்றத்தில் நடிகர் ராமராஜன் மற்றும் அவருடைய மனைவி நளினியின் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பத்திரிக்கையை நிருபர் ராமராஜனிடம் சென்று உங்கள் மனைவி நளினி பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு, நடிகர் ராமராஜன், "வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், அவர் இன்னும் என்னுடைய மனைவி. அவரைப் பற்றி நான் ஒரு மூன்றாவது நபரிடம் பேச விரும்பவில்லை." என்று கூறியுள்ளார்.

விவாகரத்து வழக்கு முடிந்த பின்னர் மீண்டும் ராமராஜனிடம் சென்ற அந்த பத்திரிகை நிருபர் இப்போதாவது நளினியை பற்றி பேசுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ராமராஜன், "எனக்கும் நளினிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவர் வேறு ஒரு பெண். அவரைப் பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது." என்று அவர் கூறிவிட்டாராம்.

நடிகர் ராமராஜனின் குணம் பற்றி வெளியாகிய இந்த தகவல் தற்போது நெட்டிசன்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramarajan divorce case History


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->