ஆர் சி 15 திரைப்படத்தின்  டைட்டில் இதுவா?  ராம்சரன் சங்கர் கூட்டணியை பற்றிய சீக்ரெட் செய்தி! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் டாப் டென் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்  சங்கர். பிரம்மாண்டமான இயக்கத்திற்கு பெயர் போன இவர் தமிழ் சினிமாவில் பலவெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்து ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்  உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு  கோல்டன் குலோப் மற்றும் ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன.

ராம்சரண் மற்றும் சங்கர் கூட்டணியில்  புதிய திரைப்படம் ஒன்று தற்போது  ஒப்பந்தமாகி இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை தயாரித்த தில் ராஜு  அவரது ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஃபிலிம் சார்பாக தயாரிக்கும் இந்த  திரைப்படத்தினைப் பற்றிய தற்போது  புதிய செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இந்தத் திரைப்படத்தினை பற்றிய ரிலீஸ் தேதி மற்றும் டைட்டில் அறிவிப்பு  ராம்சரண் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 27ஆம் தேதி வெளியிடயிருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு 'சி இ ஓ' என பெயரிடப்பட்டுள்ளதாக தெலுங்கு சினிமாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramcharan and shankar movie title news got leaked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->