பா.ரஞ்சித் படத்தில் நடிக்க மறுத்த ராஷ்மிகா.? விஜய் பட நடிகை புக் செய்த படக்குழு.!  - Seithipunal
Seithipunal


மெட்ராஸ் மற்றும் அட்டகத்தி, சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களில் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித். பின்னர், ரஜினியை வைத்து கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.

கடைசியாக அவரது இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது  ரஞ்சித் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். 

ஏஞ்சல் போல ரசிகர்கள் மனதில் ஊஞ்சல் ஆடும் மாளவிகா மோகனன்.! - Seithipunal

இந்த திரைப் படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.  இந்த படம் கே.ஜி.எப் படம் போல இருக்குமென்று ஏற்கனவே பா.ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார். காரணம் இதுவும் கோலார் தங்க சுரங்கத்தில் வசிக்கும் மக்களின் கதை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த படத்தில் ஹீரோயின் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சீயான் 61 என்று குறிப்பிடப்படும் இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் இதில் நடிக்க மறுத்துள்ளாராம். எனவே, மாளவிகா மோகனனை படக்குழு கம்மிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashmika ignored ranjith movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->