பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவியா விலக இது தான் காரணமா.?  - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இந்த சீரியல் மிகப் பிரபலமானது. 

இதில் நடித்து வரும் முல்லை கதாபாத்திரம் பலருக்கும் பிடித்ததற்கு காரணம் இதில் முதன் முதலில் முல்லையாக நடித்த சித்ரா தான். இவர் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வந்தார்.

முதலில் அவரை முல்லையாக ஏற்றுக் கொள்ள மறுத்த ரசிகர்கள் ஒரு கட்டத்தில் அவரது திறமையால் அவரை ஏற்றுக் கொண்டனர். இந்த சூழலில் தான் அவர் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதில் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த லாவண்யா முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடிக்கிறார். 

இந்நிலையில், காவியா அறிவுமணி சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதால், இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason of kavya arivumani left from pandiyan stores serial


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->