தலை முதல் கால் வரை நன்மைகளை வாரி வழங்கும் முருங்கைக்கீரை..!!
murungai keerai benefits
நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் உயிர் வாழ்ந்ததற்கு முருங்கைக்காயும், முருங்கைக் கீரையும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. முருங்கைக்கீரை மற்றும் முருங்கை காயில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், தாமிரம் போன்ற உடலுக்கு தேவையான பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த கீரையை அடிக்கடி சாப்பிடும் போது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகமாகி உடல் வலுப்பெறும். இதனால் நரம்பு தளர்ச்சி, நரம்புகளில் வீக்கம், ஆண்மை குறைபாடு, போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. அதிலும் குறிப்பாக விந்தணுக்களில் உயிரணுவை அதிகரித்து குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக முருங்கைக் கீரை மற்றும் முருங்கைக் காய் இருந்து வருகிறது. உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் குறையும்.
இதய நோய் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. தலை முதல் கால் வரை பல்வேறு நன்மைகளை தரக்கூடிய இந்த முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நோயில்லாமல் வாழலாம்.