பாவடையோடு குளின்னு சொன்னாரு.. அடிச்சாரு.. பாரதிராஜாவால் அப்செட்டான 90'ஸ் நடிகை.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 80கள் மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரேவதி. கவர்ச்சி இல்லாமல் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படக் கதாபாத்திரங்களில் நடித்து  தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். தற்போது இவர் தன்னுடைய பட அனுபவங்களைப் பற்றி டூரிங் டாக்கீஸ் என்ற இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் தன்னுடைய முதல் படமான மண்வாசனை திரைப்படத்தில் பாரதிராஜா உடனான தனது அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். நகரங்களிலேயே வளர்ந்த தனக்கு கிராமத்து சூழ்நிலைகள் அந்தப் படப்பிடிப்பில் வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக கூறியுள்ளார். படத்தில் தவறு செய்தால் நடிகர்களையும் நடிகைகளையும் அடித்து விடுவார் இயக்குனர் பாரதிராஜா. தானும் அவரிடம் அடி வாங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார் ரேவதி.

அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாடலுக்கு பாவாடை கட்டிக் கொண்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு அது அசௌகரியமாகப் பட்டதால் நடிக்க மாட்டேன் எனக் கூறி பிடிவாதம்  செய்தேன். அப்போது இயக்குனர் பாரதிராஜா கிராமங்களில் பெண்கள் இவ்வாறு தான் குளிப்பார்கள் என  தனக்கு விளக்கி புரிய வைத்ததாக தெரிவித்தார்.

அதன்பிறகு இயக்குனர் பாலச்சந்தரின் புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடித்த அனுபவங்களையும் அவர் அந்தப் பேட்டியில் கூறினார். அந்தத் திரைப்படத்தில் நடித்த பிறகு தனது நடன திறமைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார். தான் பாரதிராஜாவின் பள்ளியில் வளர்ந்தவர் என தெரிவித்த அவர் அதன் பிறகு தான்  பாலச்சந்தரிடம் வந்ததாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

revathy shares her early stages of career with bharathi raja and bala chander


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->