#பிக்பாஸ்6 : ஜி.பி.முத்துவை பெட்டிலிருந்து கீழே கவிழ்த்த வனிதா காதலன்.! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Robert harassed GP Muthu In BB 6 House
தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து. ஆறாவது சீசன் வரை வந்துள்ளது. எப்போது 6 வது சீசன் ஆரம்பிக்கும் என்று காத்திருந்த நிலையில், அக்டோபர் ஒன்பதாம் தேதி பிக் பாஸ் தொடங்கியது.
கடந்த 3 சீசன்களுக்கும் மேலாக ஜிபி முத்து பிக் பாஸில் இடம் பெறுவார் என்று உத்தேச பட்டியலில் கூறப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சீசன்களில் எல்லாம் அவர் இடம்பெறவில்லை. இந்த முறை அவர் பிக் பாஸ் வீட்டில் அடி எடுத்து வைத்துள்ளார். அவர் வந்த நாள் முதலே கமல் முதற்கொண்டு அனைத்து போட்டியாளர்களும் அவரை கலாய்த்து வருகின்றனர்.
அவரது வெகுளித்தனமான பேச்சு ரசிகர்களை கவர்கிறது. இந்த நிலையில், இரவில் தூங்கிக் கொண்டிருந்த ஜிபி முத்துவை அவரது பெட்டிற்கு அடியில் சென்ற வனிதாவின் முன்னாள் காதலன் ராபர்ட் வித்யாசமாக ஓசை எழுப்ப பயந்துபோன ஜிபி முத்து பெட்டில் இருந்து கீழே விழுகிறார். இதை பார்த்து மற்றவர்கள் சிரிக்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில், பலரும் கொந்தளிக்கின்றனர். ஒரு வெள்ளந்தியான மனிதரை இவ்வாறு செய்வது எப்படி நியாயம்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இந்த முறை இடம் பெற்ற பல போட்டியாளர்களை விட ஜிபி முத்து மீது தான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. அப்படிப்பட்ட நபரை துஷ்பிரயோகம் செய்வது எப்படி நியாயம் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
English Summary
Robert harassed GP Muthu In BB 6 House