கமல் உலக நாயகன் அல்ல; விண்வெளி நாயகன் - ரோபோ சங்கர்  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன் ரசிகர்களால் 'உலக நாயகன்' என்று அழைக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் கமல் ஹாசன் எடுத்திருக்கும் முடிவு தமிழ் திரையுலகில் பேசுப்பொருளாகி உள்ளது. 

அதாவது நடிகர் கமல்ஹாசன் நேற்று இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ அழைத்தால் போதுமானது என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்ததாவது, "அவரை (கமலை) உலக நாயகன் என்ற சிறிய கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை. அவர் விண்வெளி நாயகன் ஆவார். உலகத்திலேயே விண்வெளி நாயகன் என்பவர் ஒருவர் மட்டும் தான், அவர்தான் கமல்ஹாசன். வேறு யாருக்கும் இந்த தலைப்பை சொல்லவே முடியாது. 

அதனால் அவர் இனிவேல் உலகநாயகன் கிடையாது, விண்வெளி நாயகன் என்று தான் குறிப்பிடப்படும். இனிமேல் அவரை நாங்கள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robo sangar tweet about kamal vinveli nayagan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->