விஜய்யின் முதல் பட தயாரிப்பாளரோடு கைகோர்க்கும் தளபதி.?! அது மட்டும் நடந்தால்..? உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. இதில் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார்.

இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார். தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். 

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் வில்லியாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 

இந்தப் படத்தின் தயாரிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. நடிகர் ஜீவாவின் தந்தைக்கு சொந்தமான ஆர்.பி.சவுத்ரி குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்து படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யின் முதல் படமான பூவே உனக்காக, திருப்பாச்சி, லவ்டுடே, உள்ளிட்ட படங்களை ஆர்.பி.சவுத்ரி குட் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rp chautri good films may produce thalapathy 67 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->