ராஜேந்திரபாலாஜி எங்கு இருக்கிறார்? என்பது குறித்து ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்தார். இந்த துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் அவர் பணமோசடி செய்ததாக அவரை காவல்துறையினர் கைது செய்ய தேடி வருகின்றனர். ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக காத்திருக்கிறது.

இத்தகைய சூழலில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ளார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் கருதும் நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இத்தகைய சூழலில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில்,"ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர் தலைமறைவாக இருப்பதற்கு அதிமுக தலைவர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளியாக பார்க்க முடியாது. அவரது வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அவர் மீதான குற்றம் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. தீவிரவாதியை கையாள்வது போல முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை திமுக அரசு கையாள்வது பழிவாங்கும் நடவடிக்கை. காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலினின் இந்த அரசு செயல்படுகிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rp Udhayakumar about KT Rajenthirabalaji hidden


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->