ரூ.300 கோடி பட்ஜெட் கேமரா: ஒரே யூட்யூபர்கள் நீங்களாகத்தான் இருக்கும்! உறைந்த லோகேஷ்!
Rs 300 crore budget camera YouTubers
யூடியூபில் பலரும் தங்களது திறமைகள், ஆர்வத்தை வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்வதால் புகழ் கிடைப்பதுடன் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் தொழிலாகவும் உள்ளது.
கொரோனா காலத்தில் தங்களுக்கான யூடியூப் சேனல்களை தொடங்கி சமையல், வாழ்க்கை முறைகள், மருத்துவம், நகைச்சுவை என பல துறைகளில் செயல்பட்டு வந்தவர்கள் இன்று பிரபலங்களாக உள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பல சமையல் கலைஞர்கள் தமிழகத்திலும் விதவிதமாக பிரம்மாண்டமாக சமைத்து சந்தாதாரர்களை இலட்சக்கணக்கில் அதிகப்படுத்தி வருகின்றனர்.
அவர்களில் முதன்மையானவர்களாக இருப்பவர்கள் 'வில்லேஜ் குக்கிங்' என்ற சேனலை நடத்தும் குழுவினர். ஆல்வேஸ் வெல்கம் என தொடங்கும் இவர்களின் சமையல் வீடியோக்களுக்கு உலக அளவில் 2.27 கோடி சந்தாதாரர்களை வைத்திருப்பதால் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர்.
இவர்கள் விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் இடம் பெற்றுள்ளார். ராகுல் காந்தி கலந்து கொண்ட சமையல் வீடியோ ஒன்றை இந்த குழுவினர் வெளியிட்டனர்.
அந்த வீடியோ 6 கோடி பார்வையாளர்களை கடந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோனுக்காக கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் இணையதள வாயிலாக வாழ்த்து தெரிவித்த இந்த யூடியூபர்கள் புதியதாக வாங்கிய கேமராவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் காட்டினர்.
இதனை பார்த்து ஆச்சரியமடைந்த லோகேஷ் கனகராஜ், 'எனக்கு தெரிந்து ரெட் ராப்டர் வகை கேமராவில் வீடியோ எடுக்கும் ஒரே யூட்யூபர்கள் நீங்களாகத்தான் இருக்கும்' என தெரிவித்தார்.
வில்லேஜ் குக்கிங் குழுவினர் வைத்திருக்கும் ரூ. 34 லட்சம் மதிப்பிலான கேமராவின் அடுத்த மாடலான ரெட் வி ராப்டர் எக்ஸ் எல் கேமராவை தான் ஒழிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்ஸா ரூ. 300 கோடியில் உருவான லியோ படத்திற்கு பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rs 300 crore budget camera YouTubers