வன்முறை தூண்டுவதாக லியோவுக்கு 2வது ஆப்பு.. CBFC தலைவர் மீது RTI செல்வம் பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள இந்த நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே நடிகர் விஜயின் பிறந்த முன்னிட்டு 'லியோ' படத்தின் "நா ரெடி" என தொடங்கும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் வெளியானதில் இருந்து சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் அந்தப் பாடலில் சிகரெட் பிடிப்பது போன்றும், நடன கலைஞர்கள் கையில் மது கோப்பைகளுடனும், கஞ்சா பயன்படுத்துவது போன்றும் அந்த பாடலில் இடம்பெற்று இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்த நிலையில் நடிகர் விஜயின் லியோ பட பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் கடந்த ஜூன் 26 ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பாடல் இருப்பதால் லியோ படத்தின் "நா ரெடி" பாடலை தடை செய்ய வேண்டும்.

போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இருப்பதாக அந்த புகாரில் குற்றம் காட்டியுள்ள அவர் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவருக்கு லியோ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் குறித்து புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்தப் புகாரில் லியோ திரைப்பட பாடல் வரிகள் வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது எனவும், எனவே நான் ரெடி பாடலை நீக்க வேண்டும் எனவும் புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் அளித்த புகாரின் மீது மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் நடவடிக்கை எடுக்காததால் அவர் மீதும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் "லியோ பட பாடல் வரிகள் வன்முறையை தூண்டுவதாக நான் அளித்த புகாரில் மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் நடிகர் விஜய்க்கு உறுதுணையாகவும் ஒரு தலைபட்சமாகவும் செயல்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய் மீது புகார் அளித்துள்ள நிலையில் தற்போது மத்திய தணிக்கை வாரிய தலைவர் மீதும் புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. லியோ படம் ரிலீஸ் ஆவதற்குள் எத்தனை புகார்களில் சிக்குமோ என விஜய் ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RTI Selvam complaint against CBFC chairman in leo movie censor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->