விஜய்க்கும், எனக்கும் என்ன சண்டை.? எஸ்.ஏ.சி.விளக்கம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை தாய்க்கு இடையே உள்ள உறவு விரிசல் அடைந்துள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வரும். சமீபத்தில் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட விஜய் அவரது பெற்றோர்களை உதாசீனப்படுத்தியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது குறித்து விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், "எனக்கும், விஜய்க்கும் இருக்கும் உறவில் எந்த விதமான விரிசலும் கிடையாது. ஒன்றை வருடத்திற்கு முன்னால் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனையை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி காட்டிவிட்டன.

விஜயும் நானும் வெளிப்படையாக எங்கள் அன்பை காட்டிக்கொள்ள மாட்டோம். அதற்காக நாங்கள் பிரிந்து இருப்பதாக அர்த்தம் இல்லை. எங்கள் அன்பு எப்பொழுதும் உறுதியானது தான். சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தைக் கூட இருவரும் சேர்ந்துதான் பார்த்தோம்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sac About Vijay His Family issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->