BREAKING | நடிகர் விஜய்யின் வீட்டில் இருந்த அலுவலக பொருட்கள் ஜப்தி.!
sac office things
நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்றம் ஜப்தி செய்துள்ளது.
சட்டப்படி குற்றம் படத்துக்கான விளம்பர செலவு 76 ஆயிரம் ரூபாயை வழங்காததால், இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அலுவலகப் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் தொடர்ந்த இந்த வழக்கில், அல்லிகுளம் நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பு திறந்தது.
ஆனால், நீதிமன்ற உத்தரவுபடி, ஜப்தி செய்ய சென்ற நீதிமன்ற பணியாளர்களை, எஸ்ஏசி அலுவலக ஊழியர்கள் தடுத்ததால், காவல்துறை உதவி வழங்க வேண்டும் என நீதிமன்ற பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து காவல்துறை உதவியுடன் ஏசி, டேபிள், சேர், ஃபேன் உள்ளிட்ட எஸ்ஏ சந்திரசேகரின் அலுவலக பொருட்களை, அல்லிகுளம் நீதிமன்றம் உத்தரவுபடி, தற்போது ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஏ சந்திரசேகரின் இந்த அலுவலகம் நடிகர் விஜயின் பழைய வீடு என்பது குறிப்பிடத்தக்கது.