நீ என் புள்ள மாதிரி.. பிரபல நடிகரிடம் விஜய் அப்பா ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் தளபதி என்ற கொண்டாடப்படும் நடிகர் விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். அடுத்ததாக அவர் வம்சி இயக்கத்தில் நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார். 

இந்த படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை தில்ராஜு தயாரிக்க இதற்கு தமன் இசையமைக்கிறார். அத்துடன் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஒரு நடிகரை பார்த்து நீ என் மகன் விஜய் மாதிரியே பண்ற என்று கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது யாருமில்லை எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த ஜெய் தான்.

எஸ் ஏ சந்திரசேகர் நடிகர் ஜெய்யை வைத்து கேப்மாரி என்ற படத்தை இயக்கினார். அப்போது அந்தப் படத்தில் நடிக்கும்போதும், மற்ற நேரங்களிலும் ஜெய்யின் கேரக்டர் அப்படியே விஜயின் கேரக்டருடன் ஒத்துப்போவதாக அவரே ஜெயிடம் கூறியுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sac open talk with Vijay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->