புதிய அப்டேட்டை வெளியிட்ட 'சலார்' படக்குழு - உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. கே ஜி எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

நடிகர் பிருத்விராஜ் இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. 

இந்த திரைப்படம் அடுத்த மாதம் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

அதாவது, 'சலார்' திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி மாலை 7:19 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பட குழு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salaar movie update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->