''மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன்'' - சமுத்திரகனி புகழாரம்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக உள்ள விஜய், விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு நல பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நிவாரணம் பொருட்களை வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் கட்சி ஒன்றை தொடங்கி அதற்கு ''தமிழக வெற்றி கழகம்'' என நேற்று பெயர் வைத்துள்ளார். 

மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் சமுத்திரகனி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 

'திரை உலகின் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்ல செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா' என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Samuthirakani post goes viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->