விக்ரம் படத்தில் மேலும் ஒரு பிரபலம்.! அடடா இவர் 90'ஸ் பேவரைட் ஆச்சே.?!
Santhana bharathi join Vikram movie
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன்.
மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிரபலமாகி கொண்டு வலம் வருகிறார்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "விக்ரம்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிகழ்வு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத்பாசில், ஷிவானி நாராயணன், அர்ஜீன் தாஸ், மற்றும் பலர் நடித்து கொண்டிருக்கின்றனர். இந்த படம் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே நிறைய பிரபலங்கள் நடித்து வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சந்தானம் பாரதி இணைந்துள்ளார். தற்போது நடிகர் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Santhana bharathi join Vikram movie