"வெறும் 5 ரூபாயுடன் நாட்களை கடத்தினேன்" சரத்குமாரின் வாழ்க்கை வெற்றி பயணம்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் ஒருவராக இருப்பவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இவரது பெயரை கேட்டாலே இவர் அறிமுகம் எதுவும் தேவையில்லை. நடிகர், தயாரிப்பாளர், ஃபிட்னஸ் பயிற்சியாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். தற்போது இவரது நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தத் திரைப்படத்திற்கான ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியிடும் நிகழ்ச்சி  கடந்த வாரம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தில் இடம் பெற்ற நடிகர் நடிகைகள் படக்குழுவினர் மற்றும் அனைத்து கலைஞர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் பல்வேறு சுவையான தகவல்களையும் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி பேசிய சரத்குமார் அந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த மணிரத்தினத்திற்கு நன்றியை தெரிவித்தார். மேலும் உலக அழகியான ஐஸ்வர்யாராயை கட்டிப்பிடிக்கும் வாய்ப்பு தனக்கு அமைந்தது  மிகவும் அதிர்ஷ்டமாக உணர்வதாக தெரிவித்தார். இந்தத் திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு மிகப் பெரிய வாய்ப்பு என கூறினார் சரத்குமார். வானம் கொட்டும் படப்பிடிப்பின் போது மணிரத்தினம் தன்னை பார்த்து சென்றதாகவும் அதன் பிறகு ஒரு நாள் அவரது அலுவலகம் அழைத்து  பொன்னியின் செல்வன் பற்றி விவாதித்ததாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த காலத்திலிருக்கும் இளைஞர்களும் சிறுவர்களும் சிறு தோல்வியை கூட தாங்க முடியாமல் இருக்கின்றனர். வாழ்க்கையில் உறுதியாக எல்லா விஷயங்களையும் கடந்து வந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நான் என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். ஒரு சில படங்கள் தோல்வியடைந்து  ஆட்டோவிற்கு கூட காசு இல்லாமல் வெறும் ஐந்து ரூபாயுடன் நாட்களை கழித்திருக்கிறேன். அந்த நேரங்களில் என் நண்பன் என்னை தேடி வந்து 150 ரூபாய் கொடுத்து விட்டு சென்றான் என பகிர்ந்து கொண்டார். மேலும் 65 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த பிறகு மருத்துவர்கள்  இரண்டு அடி உயரத்திலிருந்து கூட குதிக்க கூடாது என கூறினார்கள். ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து தான் சூரியன் திரைப்படமே நடித்தேன் என தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarath kumar shares his high and low points in cinema career


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->