விஜய் கல்விக்காக செய்துள்ள உதவி பாராட்டத்தக்கது - சமக கட்சி தலைவர் சரத்குமார்.!
Sarathkumar encourage to vijay help school students
நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய், நாளைய வாக்காளர்கள் நீங்கள் தான். அடுத்தடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நமது கண்ணையே குத்திக் கொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதுதான் இப்பொழுது நிகழ்ந்து வருகிறது. ஒரு ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றால் ஒருவர் 15 கோடி செலவு செய்தால் அதற்கு முன் அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என்று சித்தித்து பாருங்கள் என மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரை படியுங்கள் என மாணவ, மாணவிகளைக் கேட்டுக் கொண்டார்.
விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினர், அரசியல் பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் செய்தியாகளை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் கல்விக்காக செய்துள்ள உதவி பாராட்டத்தக்கது எனவும் எல்லோரும் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயக நாட்டில் அனைத்து குடிமகனும் அரசியலுக்கு வரலாம். பள்ளியிலேயே 14 வயதிலேயே அரசியல் குறித்து கற்று கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசி அவர், 2026 தேர்தலுக்கு நீண்ட நாட்கள் இருக்கு. நாளைக்கு நாம் இருப்போமா என்று தெரியாது என தெரிவித்துள்ளார்.
English Summary
Sarathkumar encourage to vijay help school students