இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியம் தொடர்வதாக பிரித்தானியா எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடப்பதற்கான சாத்தியம் தொடர்ந்திருப்பதாக பிரித்தானியா அந்நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரிட்டன் பிரஜைகளுக்கு அந்தந்த நாடுகளில் நிலவும் பாதுகாப்பு மற்றும் ஆபத்தான நிலைமைகள் குறித்து பிரிட்டனின் வெளியுறவு, பொது நலவாய மற்றும் அபிவிருத்தி நிறுவனம் அடிக்கடி பயண ஆலோசனைகளை வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கான சாத்தியம் இருப்பதாக கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் என்பன எச்சரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், புத்தாண்டில் குறித்த எச்சரிக்கையை புதுப்பித்துள்ள பிரிட்டன், இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான சாத்தியம் இன்னும் தொடர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இம்முறை யூத அல்லது முஸ்லிம் சமூகத்தவர்களை இலக்கு வைத்தே தாக்குதல் இடம்பெறலாம் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கொண்டாடப்பட்ட ஈஸ்டர் தினத்தன்று, மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்தனர். 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Britain warns that the possibility of another terrorist attack in Sri Lanka continues


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->