விரைவில் சர்தார் - 2: அப்டேட் கொடுத்த கார்த்தி! ரசிகர்கள் குஷி!
Sardaar 2 Karthi gives update
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார். இந்த படத்தில் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் வெளியாகி ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது என நடிகர் கார்த்திக் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந இந்த அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக இயக்குனர் பி.எஸ். மித்ரன் நடிகர் விஷால் நடிப்பில் இரும்புத்திரை படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sardaar 2 Karthi gives update